இலவசங்களால் மக்கள் வேலைக்கு செல்ல விரும்பவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் அதிருப்தி தெரிவித்தார். டெல்லியில் சாலையோர வாசிகளுக்கு வாழ்விடம் அமைத்துத் தரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தபோது, சாலையோர வாசிகளுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதைவிட, அவர்களை பொதுசமூகத்தில் பங்கேற்க வைத்து, நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாமே எனவும் கேள்வி எழுப்பினார்.