விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு கும்பகர்ணனை போல தூங்குவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.டெல்லி கிரி நகர் மார்க்கெட்டுக்கு சென்ற அவர் அங்கு குடும்பத் தலைவிகளுடன் விலைவாசி உயர்வு பற்றி கலந்துரையாடிய வீடியோவை தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மார்க்கெட்டில் வியாபாரிகளுடன் பேசிய போது. விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடிந்த தாக ராகுல் பதிவிட்டுள்ளார். அன்றாட தேவைக்கான சிறு சிறு பொருட்களின் விலை கூட அதிகரித்துள்ளதாகவும் கிலோ 40 ரூபாய்க்கு விற்ற பூண்டு 400 ரூபாய்க்கு விற்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் ராகுல் கவலை தெரிவித்துள்ளார்.