திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் நடைபெற்ற பவித்ரோற்சவம் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் மூன்று நாட்களும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.