இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கடந்ததால் அனுர திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் அனுரா குமர திசநாயகா நாடாளுமன்றத்தை கலைத்தார். இதையடுத்து இலங்கையில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் அனுர திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 123 இடங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 31 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற 113 இடங்கள் போதும் என்ற நிலையில் தேசிய மக்கள் சக்தி 123 இடங்களை கடந்துள்ளது.