டிசம்பர் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்று பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர்-1 முதல் டிசம்பர்-19ஆம் தேதி வரை நடத்துவது தொடர்பான, அரசின் முன்மொழிவுக்கு, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, ஒப்புதல் அளித்துள்ளார். மக்களாட்சியை வலுப்படுத்தவும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், அர்த்தமுள்ள அமர்வாக இது அமையும் என எதிர்பார்க்கிறோம்இவ்வாறு கிரண் ரிஜுஜூ குறிப்பிட்டுள்ளார்.இதையும் பாருங்கள் - Parliament Winter Session 2025 | கூடுகிறது நாடாளுமன்றம் வெளியான அறிவிப்பு | Parliament session