நாடாளுமன்றத்தில் இளைய மற்றும் முதன்முறை எம்பிக்களுக்கு பேச எதிர்க்கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்.கூச்சலிடும் களமாக மக்கள் மன்றத்தை மாற்றாமல் புதியவர்களின் அனுபவத்திலிருந்து பிரச்சனைகளை அணுகுமாறும் அறிவுறுத்தல்.குடியரசு துணைத் தலைவரான பின்னர், முதன்முறையாக மாநிலங்களவையை வழிநடத்தும் சி.பி.ராதாகிருஷ்ணன்.நாட்டிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவரின் வழிகாட்டுதலில் அவை திறம்பட செயல்படும் என பிரதமர் மோடி வாழ்த்து.ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் நடுநிலையுடன் அவை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.மாநிலங்களவை தலைவர் சி.பி.ஆரை வரவேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவையில் கடும் அமளி.தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். நடைமுறையை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டதால் அவை ஒத்திவைப்பு.