சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "மீனாட்சி, மயில், மல்லி; முதல்கட்ட படப்பிடிப்பு இந்த பூமியில் என்னுடைய விருப்ப இடமான மதுரையில் முடிவடைந்தது என குறிப்பிட்டுள்ளார்.