பாரிஸ் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று திரும்பிய மாரியப்பன் தங்கவேலுவுக்கு சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சென்னை விமான நிலையம் வந்த அவரை மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், மலர் கிரீடம் அணிவித்தும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.இதனை தொடர்ந்து, நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மாரியப்பன்,பயத்தோடு போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றதாகவும், வர இருக்கும் உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு நிச்சயம் தங்கம் வெல்ல உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.