சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி ஆராட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சன்னிதானம் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்ட நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 10 ஆம் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், 11 ஆம் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டும் நடைபெற உள்ளது.