2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவே மும்பை இந்தியன்ஸ் அணியை வழி நடத்துவார் என, அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 2025-ம் ஆண்டுகான ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, பும்ரா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகிய 5 பேரை தக்கவைத்துக்கொண்டது. மேலும் அணியின் இந்த முடிவு ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.