மது ஒழிப்பு பற்றி பேச பாமக மட்டுமே தகுதியான கட்சி எனவும், அதுவும் என்னால் மட்டுமே முடியும் எனவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மது ஒழிப்பு குறித்து பாமக அறிவித்த பின்பு தான் மற்ற கட்சிகள் அதனை பேச ஆரம்பித்துள்ளதாகவும், மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை முறையாக ஒதுக்கவில்லை என்றால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.