காசாவை தனது கட்டுப்பாட்டில் எடுக்கப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது பாலஸ்தீனியர்கள் மீண்டும் காசாவில் குடியேற உரிமையில்லை என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், தாங்கள் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்கும் நோக்கில், காசாவில் இருந்து சற்று தொலைவில் பாலாஸ்தீனியர்களை இடம்பெயர செய்வோம் என்றார்.