தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. லாகூரில் நடைபெற்ற போட்டியின் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா, பின்னர் பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 37.5 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டி காக் 53 ரன்களை எடுத்தார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் 25,1 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சைம் அயூப் 77 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.