ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. கேஜி செக்டரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகேயுள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது. இதற்கு இந்திய ராணுவத்தின் கிருஷ்ணா காட்டி படைப்பிரிவின் கீழ் உள்ள நங்கி டெக்ரி பட்டாலியனின் துருப்புகள் கடும் பதிலடி கொடுத்தது.