இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில தோல்வியடைந்து பாகிஸ்தான் அணி மோசமான சாதனைய படைச்சிருக்கு. இந்த போட்டியோட முதல் இன்னிங்ஸ்ல விளையாடிய பாகிஸ்தான் அணி 500 ரன்களுக்கு மேல குவிச்சாங்க. ஆனா அடுத்து விளையாடிய இங்கிலாந்து அதிரடியா விளையாடி 800 ரன்களுக்கு மேல குவிச்சு அதிரடி காட்டினாங்க. இறுதியா இந்த போட்டியில பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்தாங்க. இதன் மூலம் முதல் இன்னிங்ஸ்ல 500 ரன்களுக்கு மேல அடித்து இன்னிங்ஸ் தோல்வியடைந்த மோசமான சாதனைய பாகிஸ்தான் அணி படைச்சிருக்கு.