பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலவாது டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தில் சுற்றுபயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி Christchurch ல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான், 18 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து ஆடிய நியூசிலாந்து அணி, 10புள்ளி 1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.