எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான், அமைதிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கை பாகிஸ்தான் வரவேற்று உபசரிப்பது என்ன மாதிரியான மன நிலை என்று வினவினார்.