சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, பாகிஸ்தான் அணியை பந்தாடியதை பார்த்து அந்த அணியின் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் ஜெர்சியில் இருந்து இந்திய அணியின் ஜெர்சிக்கு மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. 242 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 42.3 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் விளாசினார். இதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், தாம் அணிந்திருந்த பாகிஸ்தான் ஜெர்சியை மறைத்து இந்திய ஜெர்சியை அணிந்து கொண்டார்.