டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹரியானாவின் அல் ஃபலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத தொடர்பு என சந்தேகம் எழுந்ததால், முசமில் சகீல், உமர் முகமது, சகீன் சாகித் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர் சகீன், தீவிரவாதி என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பெண்கள் பிரிவை உருவாக்க சகீன் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், முசமில் ஷகீலுக்கு தீவிரவாத தொடர்பு கிடையாது என அவரது தாய் மற்றும் சகோதரர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ’நாங்கள் மனதார இந்தியர்கள்’ என்றும், தங்கள் குடும்பத்தின் மீது கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஒரு வழக்கும் கிடையாது என்றும் அவர்கள் கூறினர்.