மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கப்பட்டது பச்சை துரோகம் என யூடியூபர் டிடிஎஃப் வாசன் அவருடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். "மஞ்சள் வீரன்" படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்படுவதாக இயக்குநர் செல்அம் அறிவித்தார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள வாசன் அதில் என்னிடம் இப்போது வரை மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தகவலை இயக்குனர் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் அண்ணன் அண்ணன் என்று சொல்லிக்கொண்டு மலிவான விளம்பரத்திற்காக என்னை அவர் பயன்படுத்தியது மிகவும் வருத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.