உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 147 நாடுகளில் இந்தியா 118ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Wellbeing Research Centre மற்றும் அமெரிக்க சுதந்திர அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.