”மஞ்ச துணிக்கு கடமைப்பட்டு இருக்கேன்” என ஐபிஎல் தொடரில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது குறித்து தனது எமோஷனை கொட்டியிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். ஐபிஎல் 2025- சீசனுக்கான வீரர்களின் மெகா ஏலத்தில் சென்னை அணி மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அஸ்வின். அதில் “வாழ்க்கை ஒரு வட்டம் என்றும் 2015ம் ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் மஞ்ச துணி போட்டு விளையாட இருப்பதாகவும் தனது எல்லையில்லா பூரிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.