நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள 'தண்டேல்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் மார்ச் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கிய நிலையில், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.