தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை போலியாக கணக்கு காட்டிய ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை நேரில் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. EMIS தளத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை போலியாக பதிவு செய்து முறைகேடு நடைபெற்றதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருகிறது.