தமிழகம், புதுவைக்கான வானிலை நிலவரத்தை பொறுத்தவரை, தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து 24 மணி நேரத்தில் விலகக்கூடும், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாகவும் வானிலை மையம், கூறி உள்ளது. இனி வரும் நாட்களில் மழை நிலவரம் எப்படி?அக்.16ஆம் தேதி... தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை, காரைக்காலில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கன மழைஅக். 17ஆம் தேதி... தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்காலில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழைஅக்.18ஆம் தேதி... நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சியில் கன மழை வாய்ப்பு அக்.19ஆம் தேதி... நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் சில இடங்களில் கனமழைஅக்.20ஆம் தேதி... நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் சில இடங்களில் கனமழைஅக்.21ஆம் தேதி, தமிழகத்தின் சில இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும், லேசானது முதல் மிதமான மழை.சென்னை, புறநகர் பகுதிகள்... 16ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. வெப்ப நிலை... அதிகபட்சமாக 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்சமாக 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்மீனவர்களுக்கான எச்சரிக்கை... வங்கக்கடல் பகுதிகளில் வரும் 15, 18, 19 தேதிகளில் எச்சரிக்கை ஏதும் இல்லை. தமிழக கடலோரப்பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் 19ஆம் தேதி வரையும், வங்கக்கடல் பகுதியில 16, 17ஆம் தேதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்வரப்போகிறது வடகிழக்கு மழை... அலெர்ட்...