தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்.மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு.தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தகவல்.