சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தின் வாடகையை சென்னை மாநாகராட்சி நிர்வாகம் மும்மடங்கு உயர்த்துவது எளியவர்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு எழுதப்படும் முடிவுரையாகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான டென்னிஸ் திடல், டேபிள் டென்னிஸ் மைதானங்களை தனியாரிடம் இருந்து திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.