செர்பியா நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர் கட்சியினர் வண்ண புகைக்குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழலுக்கு எதிராகவும், ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அரசை கண்டித்தும் எதிர்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் ராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறி எதிர்கட்சியினர் மக்களவையினுள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற புகைக்குண்டுகளை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.