வேலைப்பளுவால் உயிரிழந்த EY நிறுவன பெண் ஆடிட்டரை சிறுமைப்படுத்தவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். சி.ஏ படித்த ஒரு பெண்ணால், வேலைப் பளுவைச் சமாளிக்க முடியவில்லை என்றும் எந்த வேலையைச் செய்தாலும் அதன் அழுத்தத்தைத் தாங்கும் மன வலிமை இருக்க வேண்டும். அது ஆன்மிகத்தால் மட்டுமே சாத்தியம் என அவர் பேசியிருந்தது சர்ச்சையானது.