அமளியில் ஈடுபட்டதாக, மக்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளதாக முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் உள்ளதைக் குறிப்பிட்டுப் பேசினார். இதனைத் தொடர்ந்து, விவாதத்திற்காகப் பட்டியலிடப்பட்ட தலைப்பில் இந்தியாவோ அல்லது சீனாவோ இடம்பெறவில்லை, தலைப்பின் கீழ் பேசும்படி அவைத் தலைவர் ஓம்.பிர்லா அறிவுறுத்தினர். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டன.இன்றும் அமளி, குழப்பம் இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடிய நிலையில், ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கை அருகில் சென்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.காகிதங்களை கிழித்து வீசினர் காகிதங்களை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மக்களவையில் அத்துமீறி நடந்துகொண்ட காரணத்துக்காக 374ஆவது பிரிவின் கீழ் இந்த அமர்விலிருந்து எம்பிக்களை நீக்கம் செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜு தீர்மானம் கொண்டு வந்தார்.குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், மாணிக்கம் தாகூர், குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல், வெங்கடேசன் மற்றும் டீன் குரியகோஸ் உள்ளிட்டோர் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். Related Link சீன ஆக்கிரமிப்பு, சீறிய ராகுல், கொதித்த BJP