வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கருத்து கேட்புக் கூட்டத்திற்கு பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் வருகிற 30ஆம் தேதி சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், எஸ்டிபிஐ, ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக்கழகம், ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்தார்.