ஆபரேஷன் அகழி என்ற சோதனை மூலம் திருச்சி மாவட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.உரிமையாளர்களை மிரட்டி நிலங்களை வளைத்து போட்டுள்ள பட்டரை சுரேஷ் உள்ளிட்ட பலர் வசமாக சிக்கி உள்ள நிலையில் மேலும் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் விரைவில் சிக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..