போதைப்பொருட்களை ஒழிக்க ஆபரேஷன் 2.ஓ, 3.ஓ, 4.ஓ என ஓ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என திமுக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் போதைப்பொருட்கள் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி என குறிப்பிட்டுள்ள இபிஎஸ், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கான முதல்படி என்பவதை அரசு உணரவேண்டும் என்றும், திருவண்ணாமலை இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.