மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. பிரதான மண்டல பூஜைக்கு பிறகு டிசம்பர் 27ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. ஜனவரி 16ஆம் தேதி சிறப்பு மகர ஜோதி தரிசனத்திற்கு பிறகு 20ஆம் தேதி நடை அடைக்கப்படும். 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் 4 பேட்ஜ்களாக பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், எருமேலி - சபரிமலை பெருவழிப்பாதை, சத்திரத்தில் இருந்து புல்லுமேடு வழியாக செல்லும் கானக பாதை ஆகியவை நவம்பர் 17ஆம் தேதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.