இந்தியாவை போல உரிய அடையாள ஆவணங்கள் இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற எக்சிகியூடிவ் உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.அதன் படி, அமெரிக்காவில் குடியுரிமைக்கான ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்காளர்களாக பதிவு செய்து வாக்களிக்க முடியும் என்ற நிலை ஏற்படும். அமெரிக்காவில் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதில் இதுவரை தோல்வியே ஏற்பட்டுள்ளதால், இனி மேல் அடையாள ஆவணங்கள் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது என்ற சட்டதிட்டத்தை உருவாக்குமாறு மாநிலங்களுக்கு அதிபரின் ஆணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பெடரல் அரசின் இந்த உத்தரவை பின்பற்றாத மாநிலங்களுக்கு நிதி வழங்கப்பட மாட்டாது எனவும் டிரம்ப் தமது ஆணையில் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை தேர்தல்களை நடத்தும் முழு அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளதால், டிரம்பின் இந்த உத்தரவு அங்கு பல சட்டபூர்வ சவால்களை சந்திக்கும் என கூறப்படுகிறது.