ஆந்திராவில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பட்டாசுகள் வெடித்ததில் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காக்கிநாடா நகரில் வார்பு சாலையில் உள்ள பாலாஜி எக்ஸ்போர்ட்ஸ் என்கிற ஏற்றுமதி நிறுவனத்தில் ஹைதராபத்தில் இருந்து வந்த பட்டாசு பார்சல்களை தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வெங்காய வெடி பார்சல் கிழே விழுந்து விபத்தை ஏற்படுத்தியது.