நிபா வைரஸ் பரவல் காரணமாக, தமிழக எல்லையில் தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழக - கேரள எல்லைகளில் மீண்டும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், போடிநாயக்கனூர் அருகே முந்தல் சோதனை சாவடியில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தீவிர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் இருந்து வரும் கார், பேருந்துகள் மற்றும் காய்கறி வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல போடி மெட்டு பகுதியிலும் சோதனை நடத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.