ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் மாநில உரிமைகளை பறிக்கும் எண்ணத்தில் பாஜக செயல்படுவதாக திமுக MP கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.தஞ்சாவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கலைஞர் 100 வினாடி வினா போட்டியை நேரில் பார்வையிட்டார்.முன்னதாக பேட்டியளித்த அவர், தங்களின் கருத்துக்களை மக்கள் மீது திணிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவினர் செயல்பட்டு வருவதாக கூறினார்.