எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரேநாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு கடந்த வாரம் மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்கிறார்.