அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்த்து அவிநாசி - அத்திக்கடவு திட்டம்-2 செயல்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கோவை அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவில் அவிநாசி - அத்திக்கடவு திட்டக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், விவசாயிகளின் விரோதியாக முதலமைச்சர் இருப்பதாக குற்றம்சாட்டினார்.