தீபாவளியை முன்னிட்டு ஆவின் நிறுவனம், இனிப்புகளுக்கான காம்போ ஆஃபர்களை அறிவித்துள்ளது. மைசூர்பாகு 250 கிராம், மிக்சர் 200 கிராம், ஆவின் குக்கீஸ் 80 கிராம், 10 ரூபாய் சாக்லேட் ஆகியவை அடங்கிய காம்போ 300 ரூபாய்க்கும், நெய் பாதுஷா 250 கிராம், பாதாம் மிக்ஸ் 200 கிராம், குலாப் ஜாமூன் 250 கிராம், மிக்சர் 200 கிராம், 10 ரூபாய் சாக்லேட் அடங்கிய காம்போ 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் தலா 250 கிராம் காஜு பிஸ்தா ரோல், காஜூ கட்லி, நெய் பாதுஷா, முந்திரி அல்வா அடங்கிய காம்போ 900 ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.