திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளையொட்டி, சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமியை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பெருமாள் சாமி காளிங்க நர்த்தன கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி, கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.