தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில், பாமக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வரும் 14ஆம் தேதி முதல் பெறப்படும் என அக்கட்சித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் டிசம்பர் 20ஆம் தேதி வரை காலை 11 முதல் முதல் 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி, மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்களை நிரப்பி, தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.