ரஜினியின் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. லைக்கா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் வேட்டையன் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பது இப்படத்தின் போஸ்ட்டரை பார்க்கும்போதே தெரிகிறது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ஆடியோ லாஞ்ச் வரும் 20ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.