தொடர் விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சனி, ஞாயிறு மற்றும் மிலாடி நபி ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு 1900 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரையிலும், கோயம்புத்தூர் செல்வதற்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் நாகர்கோவில் செல்ல 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.