ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட், செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார். செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை டெல்லி, மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உசேன் போல்ட், இந்திய மக்கள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் எனவும், தனக்கு இந்தியாவில் அதிகளவில் ரசிகர்கள் இருப்பதாகவும் கூறினார்.