ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் நஷ்டத்தை சரிகட்டும் பணியின் ஒருபகுதியாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஓலா இறங்கியுள்ளது. அதன்படி சுமார் 4,000 பேர் பணிபுரியும் ஓலா நிறுவனத்திலிருந்து 25 சதவீதம் பணியாளர்களை நீக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.