எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஓலா, சுமார் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 495 கோடி ரூபாய் நிகர இழப்பை பதிவு செய்த ஓலா நிறுவனம்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2,000 ஊழியர்களை ஓலா நிறுவனம் பணி நீக்கம் செய்தது.இந்த நிலையில், ஓலா நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர்களின் புகார்கள் குவிந்ததால், அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.