ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு, பிப்ரவரி மாதம் மிகவும் குறைந்துள்ளது. ஒரே மாதத்தில் 40,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரை கூட விற்பனை செய்த அந்த நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் வெறும் 8 ஆயிரத்து 647 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே விற்பனை செய்துள்ளது. ஓலாவின் இந்த வீழ்ச்சிக்கு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தக்கவைக்க தவறியதே காரணம் என கூறப்படுகிறது