இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், அந்த போட்டியில் அணியின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்ததாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் விளையாடி ரொம்ப காலம் ஆகிவிட்டதாகவும், சரியான நேரத்தில் எதிர்பார்த்த இந்த வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.